சுவிசேஷ செய்தி
– பின்வருவனவற்றை வாசிக்கவும்:
ஆதி. 1:1 | ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். |
ரோமர் 3:23 | எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகிறார்கள் |
யோவான் 8:34 | இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். |
தேவன் நம்மை உண்டாக்கினார் ஆனால் நாம் அவரை அறியவில்லை. நம்முடைய பாவ சுபாவத்தினிமித்தம் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டும் இருக்கிறோம். தேவன் இல்லாத நம்முடைய வாழ்க்கையில் நோக்கமும் அர்த்தமும் இல்லை. நம்முடைய பாவத்தின் விளைவு (கொடுக்கும் விலை) ஆத்மீக மற்றும் சரீரப் பிரகாரமான மரணம். ஆத்மீக மரணம் என்பது தேவனிடமிருந்து பிரிந்த நிலை. உடல் அழிந்துபோவது சரீர மரணம். நாம் பாவத்தில் மரித்தோமென்றால் தேவனிடமிருந்து நித்தியத்திற்கும் பிரிக்கப்பட்டு நரகத்தில் போய் சேர்வோம். எப்படி பாவத்திலிருந்து நம்மை நாம் காத்துக்கொண்டு தேவனிடத்தில் திரும்ப முடியும்? நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியாது ஏனென்றால் பாவியாகிய ஒரு மனிதன் தன்னைதான் காப்பாற்றிக்கொள்ள முடியாது (மூழ்குகிற ஒரு மனிதன் தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ள முடியாததைப் போல). மற்றவர்களும் நம்மைக் காப்பாற்ற முடியாது ஏனென்றால் எல்லாரும் பாவம் செய்தவர்கள் (மூழ்கிக்கொண்டிருக்கிற ஒருவன் மூழ்கிக்கொண்டிருக்கிற மற்றொருவனைக் காப்பற்றமுடியாது. இருவருக்கும் உதவி தேவை). நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற பாவமில்லாத ஒருவர் (மூழ்காத) தேவை. பாவமே இல்லாத ஒருவர்தான் நம்மைக் காப்பாற்ற முடியும். எல்லோரும் பாவம் செய்து பாவிகளான இந்த உலகில் பாவமே இல்லாத மனிதனை எப்படி கண்டுபிடிப்பது. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற பாவமே இல்லாத (மூழ்கிக்கொண்டிராத) ஒருவர்தான் தேவை. பாவமில்லாத ஒருவரால்தான் நம்மைக் காப்பாற்ற முடியும். எல்லோரும் பாவம் செய்தவர்களாயிருக்கும் உலகத்தில் பாவமில்லாத ஒருவரை எப்படிக் கண்டுபிடிப்பது?
ரோமர் 6:23 | பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். |
யோவான் 3:16 | தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். |
மத்தேயு 1:23 | அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். |
யோவான் 8:23 | அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. |
மாற்கு 1:11 | அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. |
யோவான் 8:36 | ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் |
யோவான் 3:3 | இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். |
யோவான் 1:12 | அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். |
நம்மை உண்டாக்கி நம்மை ஆழமாக அன்பு செய்யும் தேவனே இதற்கு ஒரு தீர்வைக் கொடுத்தார். அளவிட முடியாத அவரின் அன்பினால் தன்னுடைய சொந்த குமாரனாகிய இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரிக்க அனுப்பினார். இயேசு பாவமற்றவர் ஏனெனில் அவர் உலகத்திலிருந்து வரவில்லை. மேலும், பூமியில் வாழ்ந்தபோதும் சாத்தானின் பாவச்சோதனையை மேற்கொண்டார். அவரது வாழ்க்கை பரலோகத்திலிருக்கிற தேவனைப் பிரியப்படுத்தியது. இயேசு நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு நமக்காக சிலுவையில் மரித்தார். நம்முடைய வாழ்க்கையின் இரட்சகர் அவரே (இயேசுவால் நம்மைக் காப்பாற்ற முடியும் ஏனென்றால் அவர் மூழ்காதவர்). இயேசு சிலுவையில் மரித்ததன் நோக்கம் நம்முடைய பாவங்களுக்கான விலையை செலுத்தி, நம்முடைய பாவங்களை நம்மைவிட்டகற்றி தேவனிடமிருந்து முறிந்த நம்முடைய உறவைப் புதுப்பிப்பது. தேவனுடைய வல்லமையால் நாம் ஆன்மீக மரணத்திலிருந்து (தேவனிடமிருந்து பிரிந்த நிலை) உயிர்பிக்கப்படுகிறோம். இந்தப் புதிய உறவுதான் மறுபடி பிறப்பது என்றழைக்கப்படுகிறது. இது நம்முடைய உண்டாக்குதலுக்கும் வாழ்க்கைக்குமுள்ள நோக்கத்திற்கு மீளப்பண்ணுகிறது. மேலும் வாழ்வதற்கு உண்மையான அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கிறது.
யோவான் 11:25 | இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; |
ரோமர் 6:9 | மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. |
அப்போ. 2:24 | தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. |
ரோமர் 14:9 | கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார். |
அப்போ. 1:11 | கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். |
இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து செலுத்திய பலியை பரலோகத்திலிருக்கிற தேவன் அங்கீகரித்தார் என்பதற்கு ஆதாரம் என்ன? இயேசு மரணத்திலிருந்து தேவனால் உயிர்பிக்கப்பட்டதே அந்த ஆதாரம். உயிர்தெழுதலின் மூலம் இயேசு மரணத்தை மேற்கொண்டார் (மரணத்திற்கு அவர்மேல் வல்லமை இல்லை) என்பது நிரூபணமாகிறது. ஆதலால் அவர் பிழைத்திருப்பதால் நாமும் பிழைக்க முடியும். அவர் ஜீவன் நமக்குள் இருப்பதால் பிழைத்திருக்கிறோம். மேலும், உயிர்த்தெழுந்தார் என்பதால் அவர் இன்றைக்கு உயிரோடிருக்கிறார்.
யோவான் 5:24 | என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். |
யோவான் 10:9 | நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். |
யோவான் 14:6 | அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். |
யோவான் 8:24 | ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். |
அப்போ 4:12 | அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். |
ரோமர் 10:13 | ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். |
ரோமர் 10:11 | அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. |
ரோமர் 2:11 | தேவனிடத்தில் பட்சபாதமில்லை. |
ரோமர் 3:22 | அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. |
ரோமர் 10:9 | என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். |
நம்முடைய பாவங்கள் நீக்கப்பட்டு எப்படி புதுவாழ்வைப் பெற முடியும்? இயேசுவை நம்முடைய ஆண்டவராகவும் இரட்சகராகவும் நம்புவதால்தான். நம்முடைய பாவ வழிகளை விட்டு மனந்திரும்பி இயேசுவை நோக்கி மன்னிக்கும்படியாகவும் காப்பாற்றும்படியாகவும் அழைக்கும்போது அவர் அதைச் செய்வார். நம்முடைய பாவங்களுக்காக மரிக்கும் படியாக இவ்வுலகத்திற்கு வந்த தேவகுமாரனே இயேசு. இப்பூமியில் யாரெல்லாம் அவர்மேல் நம்பிக்கையிடுகிறார்களோ அவர்கள் தேவனிடத்திலிருந்து பாவமன்னிப்பை பெறுகிறார்கள், பாவத்திலிருந்து (நரகத்திலிருந்தும்) காப்பாற்றப்பட்டு தேவனிடத்திலிருந்து புதுவாழ்வைப் பெறுகிறார்கள். தேவன் பாரபட்சம் காட்டுபவரல்ல. நாம் வாழும் நாடோ, பேசும் மொழியோ, பணக்காரரோ ஏழையோ, ஆணோ பெண்ணோ, இளையோரோ முதியோரோ, அல்லது வேறு உடல்ரீதியான வித்தியாசமோ அவரைப் பாதிப்பதில்லை. இயேசுவை நம்பி தம் பாவத்தை அறிக்கையிடுகிற எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். இயேசுவை பின்பற்ற நீங்கள் தீர்மானித்தால் பின்வரும் ஜெபத்தை ஜெபிக்கவும்.
பரலோகத்திலிருக்கிற தேவனே, என்னுடைய பாவங்களுக்காக மரிக்கவும் அதனால் நான் இரட்சிக்கப்படவும், பரலோகத்திலிருந்து வரும் புதுவாழ்வைப் பெறவும் உம்முடைய ஒரேபேறான மகனாகிய இயேசுவை அனுப்பியதற்காக நன்றி. நான் என் வழிகளுக்காக மனஸ்தாபப்பட்டு என் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன். நீர் எனக்குக் கொடுக்கும் இந்தப் புதுவாழ்வில் உமக்குப் பிரியமான வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும், வழிநடத்தும். ஆமென்.
மேற்கூறியிருக்கும் இந்த ஜெபத்தை நீங்கள் வேண்டியிருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய ஒரு சபையை காண்பிக்கும்படி தேவனிடத்தில் கேளுங்கள். ஜெபத்தின் மூலமாக தினந்தோரும் தேவனிடத்தில் பேசுங்கள். தேவனும் உங்களிடத்தில் பேசுவார். தேவனுடைய குரலைக் கேளுங்கள். தேவன் உங்களை வழிநடத்துவார். அவர் உங்களை அன்பு செய்கிறார், உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அவரை நம்பலாம். அவரை நம்புகிறவர்களை அவர் கைவிடுவதில்லை. தேவன் நல்ல தேவன். அவரை நம்பமுடியும். உங்களுடைய வாழ்க்கைக்கு அவரை ஆதாரமாகக் கொள்ளாமுடியும். உங்களுடைய தேவைகளை அவருக்கு முன்பாக்க் கொண்டுவாருங்கள். அவர் உங்களை ஆதரிப்பார், ஆசீர்வதிப்பார். தேவன் சொன்னார், ’நான் உன்னைவிட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.’ தேவனிடத்தில் நம்மிக்கையாயிருங்கள். இயேசுவின் மூலம் ஆசீர்வதிக்கப்படுங்கள்.
யோவான் எழுதின சுவிசேஷத்திலிருந்து தொடங்கி வேதாகமத்தை தினமும் வாசியுங்கள். கூடுதல் இணைய வளங்களுக்கு, இங்கே அழுத்தவும்.